கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் இளமங்கலம், வதிஷ்டபுரம், கோழியூர் உட்பட 24 வார்டுகளிலும் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இவைகள் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவர்களை விரட்டி கடிக்கின்றன். மேலும் வாகனத்தில் செல்பவர்களையும் நாய்கள் விரட்டுவதால் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.