அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-02 16:30 GMT
கடலூர் ஒன்றியம் புதுக்கடை ஊராட்சி அங்கன்வாடி மையம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் கட்டிடம் முழுவதும் ஒழுகுவதால், குழந்தைகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கட்டிடம் மிகவும் பெலவீனம் அடைந்து காணப்படுவதால் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன் வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் மிகவும் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் அங்கன் வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்