கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் நத்தவெளி இணைப்பு சாலை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையம் அருகில் கடலூர்-திருவந்திபுரம் சாலையில் இணைகிறது. இந்த சாலையில் பஸ் நிறுத்தம் ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் நத்தவெளி சாலையோரம் வசிக்கும் மக்கள், பஸ் ஏறி வெளியூர் செல்ல வேண்டுமானால் நீண்டதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியோர், சிறுவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். அதனால் நத்தவெளி சாலையில் சரவணா நகர் அருகில் பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.