கோவை மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட கணபதிபுதூர் மேல்புறத்தில் 3-வது வீதியில் இருந்து சத்தி சாலை சிக்னல் வரை சாக்கடை கால்வாய் மீது பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சிமெண்டு கற்கள் அமைத்து, நடைபாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதில் சில சிமெண்டு கற்கள் உடைந்து காணப்படுகின்றன. இதனால் அதன் மீது நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி கால்வாய்க்குள் விழும் நிலை உள்ளது. எனவே புதிய சிமெண்டு கற்கள் பொருத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.