கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து குண்டு உப்பலவாடி செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். சாலை சுருங்கிவிட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்வதற்கே பொதுமக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்களும், பணிக்கு செல்ல முடியாமல் ஊழியர்களும் சிரமப்படுகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, அதனை விரிவுப்படுத்தி போக்குவரத்து நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.