சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையம், செஞ்சேரிமலை, ஜல்லிபட்டி ஆகிய இடங்களில் பி.ஏ.பி.வாய்கால் ஓரங்களில் புதர் செடிகள மண்டி காணப்படுகிறது. இதன்வேர்கள் ஆழமாக பரவி வாய்காலின் கரையை பலம் இழக்க செய்கிறது. மேலும் விஷ பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. எனவே புதர் செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.