கடலூர் உழவர் சந்தை அருகில் சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.