காலி மதுபாட்டில்கள்

Update: 2022-08-27 13:08 GMT

பொள்ளாச்சி அருகே சீனிவாசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையில், இரவு நேரங்களில் சிலர் அமர்ந்து மது குடிக்கின்றனர். பின்னர் போதையில் காலி பாட்டில்களை தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர். அவை உடைந்து, பகல் நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்பவர்களின் கால்களை பதம் பார்க்கின்றன. இது தவிர இயற்கை உபாதைகளை கழிக்கும் பகுதியாக மாறி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்