கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-26 10:44 GMT

கோவை நியூ சித்தாபுதூர் பகுதியில் கால்வாய் ஒன்று செல்கிறது. அந்த கால்வாயில் குப்பைகள் நிறைந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தண்ணீரும் மாசடைந்து வருகிறது. இது தவிர மழைக்காலங்களில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் நுழையும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்