கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. அவை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் படுத்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.