வடலூர் நான்குமுனை சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறாகவும், அதிவேகமாகவும் சென்று வருகின்றன. இதனால் நான்குமுனை சந்திப்பில் சாலையை கடக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.