கடலூர் டவுன்ஹால் ரவுண்டானாவில் இருந்து புதுச்சேரி செல்லும் நேதாஜி ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் செம்மண்டலம், புதிய கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று வருகிறது. இந்த நிலையில் ஷேர் ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி பழைய கலெக்டர் அலுவலகம் புனித வளனார் கல்லூரி, லேனா மெடிக்கல் தெரு வழியாக காவல்துறையால் அமல்படுத்தப்பட்ட ஒரு வழி பாதையில் சென்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். ஆகவே விதிமுறைகளை மீறி ஒரு வழிப்பாதையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.