மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட மூவர்புரத்தில் இலுப்பைக்குளம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் இந்த குளத்தை குளிப்பதற்கும், விவசாய தோட்டங்களுக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், முறையாக பராமரிக்காததால் குளம் முழுவதும் பாசிகள் படர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.