திருப்பூர் மாநகராட்சி 10-வார்டு ஆத்துப்பாளையம் வெங்கமேடு செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று உருவாகும் வாய்பு உள்ளது என 'தினத்தந்தி' புகார்பெட்டி பகுதியில் செய்தி பிரசுரமானது. இதையடுத்து நேற்று மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். குப்பைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தூய்மை காவலர்களுக்கும், இதனை வெளிப்படுத்திய தினத்தந்திக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.