புதுவை மறைமலை அடிகள் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றி விரிவாக காணப்படுகிறது. சாலை நடுவில் தடுப்பு கட்டை இல்லாததால் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பஸ் அதிக வேகத்தில் தாறுமாறாக செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை நடுவில் தடுப்பு கட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.