மின்மாற்றி அருகே எரியும் தீ

Update: 2022-07-25 15:07 GMT

மின்மாற்றி அருகே எரியும் தீ

திருப்பூர் ராம் நகர் முதல் வீதியில் ரோட்டோரத்தில் ஒரு மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியின் அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டிக்கு சில நேரங்களில் வழிபோக்கர்கள் தீ வைத்து விடுகின்றனர். குப்பை தொட்டியில் எரியும் தீயானது நேராக மின்மாற்றியை நோக்கி எரிகிறது. இதனால் மின்மாற்றியில் தீ பரவி பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதன் பாதிப்பு மிகவும் பெரிதாக இருக்கும். எனவே, குப்பை தொட்டிகளுக்கு தீ வைப்பவர்கள் இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும். இதேபோல் மின்மாற்றியின் அருகில் குப்பை தொட்டிகளை வைப்பதை மாநராட்சி நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.

பிரபாகரன், ராயபுரம். 98417 49158

மேலும் செய்திகள்