செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் கெங்கதேவன் குப்பம் கிராமத்திற்கு கிழக்கு கடற்கரைசாலையில் இருந்து செல்ல 4 கி.மீ தார் சாலை உள்ளது. இந்த சாலை முழு தும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் இருப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத் திற்கு உள்ளாகின்றனர். விபத்து நிகழ்ந்து உயிர் சேதம் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.