திருப்போரூர் தாலுகாவில் எட்டு லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ளனர். திருப்போரூர் தாலுகாவில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர், ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல், தடையில்லா சான்று, கனரக வாகன உரிமம் போன்றவற்றை பெற, 40 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு அடுத்த பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்து செலவு, கால விரையம், உடல் சோர்வு போன்றவை ஏற்படுகிறது. பொதுமக்களின் சிரமத்தை போக்க திருப்போரூரில் மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.