கிழக்கு தாம்பரம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி தொடங்கி கேம்ப் ரோடு வரை உள்ள சாலை மோசமாக இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் சீரிய நடவடிக்கையால் அகல தார் சாலை போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் துணை நின்ற தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்தனர்.