வாலாஜாபாத் பிரதான சாலையின் வழியாக மேட்டுத்தெரு, மண்ணிவாக்கம், ராம் நகர் வரை இயங்கி வந்த மினி பஸ் சேவை கடந்த ஒரு ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் முதியோர்கள் வெளியிடங்களுக்கு சென்று வர சிரமப்படுகிறார்கள். மீண்டும் மினி பஸ் சேவை தொடங்கப்படுமா?