சிவகங்கை-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை அண்ணாநகர் பகுதி அருகே செல்லும் சாலையில் உள்ள சில மின் விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.