புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி திருநகர், மல்லிகை நகர் மற்றும் பி.எஸ்.கே. நகர் பகுதிகளில் நீண்ட நாட்களாக தெருவிளக்குகள் எரியாததால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.