எருமப்பட்டி அருகே வரகூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளி கேட் அருகே உள்ள கம்பத்தில் மின் பெட்டி மூடப்படாமல் மிகவும் ஆபத்தான நிலையில் திறந்த நிலையில் உள்ளது. மேலும் மாணவர்கள் அந்த பகுதியில் நின்று பஸ்சில் ஏறி செல்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி மின்பெட்டியை மூட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?