நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த குத்தாங்கல்மேடு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 4 மாதங்கள் ஆகியும் இதுவரை இந்த உயர் கோபுர மின் விளக்குக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. எனவே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உயர்கோபுர மின் விளக்கிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?