பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) பகுதியில் எழுபத்தி எட்டு ஏரியா உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அது காட்டுயானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் பகுதி ஆகும். தெருவிளக்குகள் இல்லாததால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.