நாகை மாவட்டம் திட்டச்சேரி-திருமருகல் இடையே மெயின் சாலையில் காந்தி நகர் பகுதியில் இரும்பு மின்கம்பம் ஒன்று அமைந்துள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் துருபிடித்து பெரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கம்பம் வலுவிழந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?