நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி- ஆலத்தூர் சாலை தண்டாளம் பிள்ளையார்கோவில் அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள்பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?