நாகை மாவட்டம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் கீழத்தெருவில் 1௦௦-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின்வினியோகத்துகாக ஆங்காங்கே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு மின்கம்பம் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்,வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு சாலையோரத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?