Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2025 11:44 AM GMT
அரசு | செங்கல்பட்டு
#58119

எரியாத மின்விளக்கு...

எரியாத மின்விளக்கு...மின்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் வ.உ.சி தெருவில் உள்ள மின் விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்கள், பள்ளி, கல்லூரிமுடிந்து திரும்பும் மாணவ-மாணவிகள் மிகவும் அச்சத்துடன் செல்லும்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்விளக்கு எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:43 AM GMT
சமூக ஆர்வலர் | செங்கல்பட்டு
#58118

குப்பைகளால் சுகாதாரம் கேள்விக்குறி?

குப்பைகளால் சுகாதாரம் கேள்விக்குறி?குப்பை

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, லெட்சுமிபுரம், ராஜீவ்காந்தி தெரு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக தெருமுனையில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பலநாட்களாக குப்பை அகற்றப்படாததால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதே பகுதியில் கார்கள் நிறுத்திவைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும் வாகங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:41 AM GMT
நவீன் வாசுதேவன் | செங்கல்பட்டு
#58117

சாலையில் கழிவுநீர்....

சாலையில் கழிவுநீர்....கழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் குழாய் உடைந்து சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலநிலை காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகுந்த துயரத்தை அடைகிறார்கள். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுவதால் மிகுந்த போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கழிவுநீர் குழாயை சீரமைத்துதர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:39 AM GMT
சரவணன் | திருவள்ளூர்
#58116

கழிவுநீரால் அவதி...

கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் தாதுகான்பேட்டையில் உள்ள தெருவின் சாலையில் கழிவுநீர்தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்லும் அவலநிலை காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு உடனடி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:38 AM GMT
ராஜன் | திருவள்ளூர்
#58115

சுகாதார சீர்கேடு...

சுகாதார சீர்கேடு...கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம், வடக்கு ராஜவீதி சாலை மிகவும் பரபரப்பானது. இந்த சாலையில்தான் மாவட்ட சுகாதார அலுவலகமும் அமைந்துள்ளது. ஆனால் இந்த பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் கால்வாய்கள் திறந்த நிலையில் இருப்பதால் சுகாதாரம் மிகவும் கேடாக உள்ளது. மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களால் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களிடையே முக சுளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக சரிசெய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:36 AM GMT
சுகுமார் | திருவள்ளூர்
#58114

கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுமா?

கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுமா?கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம், பெரிய களக்காட்டூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், இங்குள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் சரியாக புனரமைக்காமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாவது பெருகி உள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:34 AM GMT
சமூக ஆர்வலர் | திருவள்ளூர்
#58113

பழுதடைந்த ரேசன் கடை...

பழுதடைந்த ரேசன் கடை...மற்றவை

திருவள்ளூர் மாவட்டம், சிவன்வாயில் ரேசன் கடையை அந்தபகுதியை சுற்றிலும் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில், இது தற்போது மிகவும் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் அதை பயன்படுத்திவரும் பொதுமக்கள் அச்சத்தோடே பொருட்களை வாங்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த ரேஷன் கடையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:33 AM GMT
பொதுமக்கள் | சென்னை
#58111

பொதுமக்கள் அவதி...

ட்ரெண்டிங்

சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் இந்திராகாந்தி சிலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகுகிறார்கள். மதுபோதையில் நடக்கும் சண்டைகள் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களை வெகுவாக பாதிக்கிறது. மேலும் டாஸ்மாக் கடையின் அருகில் பார் உள்ளபோதும், சிலையை சுற்றி மதுபிரியர்கள் மது அருந்துவது வாடிக்கையாகவே இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:32 AM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#58108

கழிவுநீர் கால்வாய்மூடி மாற்றப்படுமா?

கழிவுநீர்

சென்னை கொருக்குப்பேட்டை தியாகப்ப செட்டி தெருவில் உள்ள சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்து கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதியின் சுகாதாரம் மிகவும் சீர்கேடாகி உள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவரும் சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்மூடியை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:30 AM GMT
சங்கர் | சென்னை
#58106

உயிரை பறிக்கும் மின்பெட்டி

உயிரை பறிக்கும் மின்பெட்டிமின்சாரம்

சென்னை செனாய் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு மின்பெட்டி திறந்தநிலையில் வயர்கள் வெளியே தெரியும் வகையில் மிகவும் ஆபத்தாக உள்ளது. சிறுவர்கள் பெரியவர்கள் என அதிகமானோர் உள்ளதால், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் புதியதாக மின்பெட்டியின் மூடியை பொருத்தி பொதுமக்களின்பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick