23 Oct 2022 4:09 PM GMT
#20086
பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீர்
பறையம்பட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பறையம்பட்டு கிராமம். இங்கு வாணாபுரம் செல்லும் சாலை அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு மழை பெய்தால் பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு மழைநீரில் நடந்து செல்கின்றனர். நீண்ட நாட்களாக குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, பறையம்பட்டு.