24 March 2024 5:29 PM GMT
#45481
தண்ணீர் திறந்து விட வேண்டும்
வேப்பனஹள்ளி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மார்க்கண்டேயன் நதி மற்றும் குப்தா நதி மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே நதிகள் வறண்டு விட்டன. இந்த ஆண்டு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே நதிகளுக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தி, கிருஷ்ணகிரி.