27 Sep 2023 5:54 PM GMT
#40733
குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்
பாவளம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
சங்கராபுரம் தாலுகா பாவளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்துவதோடு, மழைநீர் தேங்காதவாறு வழிவகை செய்ய வேண்டும்.