21 Sep 2022 12:47 PM GMT
#16319
சுகாதாரமற்ற குடிநீர்
புளியங்குளம்
தெரிவித்தவர்: மதிராஜ்
கோவில்பட்டி அருகே புளியங்குளம் வடக்கு தெருவில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து குடிநீருக்காக பயன்படுத்தும் ஆழ்துளைகிணற்றின் உள்ளே செல்வதால் அந்த நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இளையரசனேந்தல் பகுதிகளில் தனிக்குடிநீர் குழாய் திட்டம் முன்பே வந்துவிட்டாலும் இந்த பகுதிக்கு இன்னும் வரவில்லை. இந்த பகுதியில் தான் ஆழ்துளைகிணறு உள்ளது. எனவே, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.