Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 July 2023 2:36 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35483

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலை

பெங்களூரு சுல்தான்பாளையா 14-வது கிராஸ் பகுதியில் ஒரு சாலை உள்ளது. இந்த சாலையில் குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பணிகள் முடிந்து பல வாரங்கள் ஆகியும் அந்த பள்ளம் முறையாக மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சாலை பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:36 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35482

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு மத்திகெரே பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர், வியாபாரிகள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். அந்த நடைபாதையில் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் கிளைகள் எப்போது வேண்டுமானாலும், முறிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதற்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த மரத்தை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:36 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35481

பெயர்ந்து கிடக்கும் சாலை

சாலை

பெங்களூரு ரிச்மண்டு டவுன் பகுதியில் சாலைகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்த சந்திப்பு அருகே சாலை பெயர்ந்து கிடக்கிறது. இதற்காக அந்த பள்ளங்களில் சிலாப்புகள் போடப்பட்டுள்ளன. தற்போது அந்த கற்களும் பெயர்ந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளால் அந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலை பள்ளத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:35 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35480

நடைபாதையில் கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு யஷ்வந்தபுரம் பகுதியில் மெட்ரோ நிலையம் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் உள்ள மரத்தின் அருகே குப்பை கழிவுகள் போடப்பட்டு வருகிறது. இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அவை காற்றில் பறந்து சாலையில் சிதறி கிடக்கின்றன. அவற்றை அகற்ற தூய்மை பணியாளர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:35 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35478

நடைபாதை சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு இந்திராநகர் 100 அடி சாலையில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையின் குறுக்கே ஆங்காங்கே சிலாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2023 6:54 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#35394

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

மற்றவை

பெங்களூரு அல்சூர் ஏரி அருகே 4-வது மெயின் சாலையில் அந்த பகுதியினர் குப்பைகளை வீசி வருகின்றனர். இதனால் தற்போது அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. பல வாரங்கள் ஆகியும் அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றாமல் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2023 6:54 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#35393

சாலையில் நீண்ட நாட்களாக நிற்கும் கார்

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர், 4-வது மெயின் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த கார் பல மாதங்களாக அங்கே நிற்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அந்த காரை அங்கிருந்து அகற்றி போக்குவரத்து இடையூறு இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2023 6:54 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#35392

சாலை பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு கன்னமங்களா பிரதான சாலையில், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளால் அந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் இந்த பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைவாக சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2023 6:54 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#35391

குப்பை கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 9-வது மெயின், 5-வது பிளாக் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது. அவற்றை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களாக அகற்றாமல் அப்படியே விட்டு உள்ளனர். இதனால் குப்பை கழிவுகள், சாலைகளில் சிதறுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும் குப்பை கழிவுகளில் இருந்து பயங்கர துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே அந்த குப்பை கழிவுகளை உடனே அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள் வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2023 6:52 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#35390

கட்டிட பொருட்களால் நடைபாதை ஆக்கிரமிப்பு

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 8-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையின் அருகே வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த நடைபாதையில் கட்டுமான பணிக்கான பலகைகள், தார்ப்பாய்கள் போன்ற பொருட்கள் போட்டு வைக்கப்பட்டு உள்ளன. இதன்காரணமாக அந்த நடைபாதை கட்டிட பொருட்களால் ஆக்கிரமித்தது போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே பாதசாரிகள் வசதிக்காக அந்த நடைபாதையில் கிடக்கும் கட்டிட பொருட்களை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 3:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35096

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் சாலையின் ஓரத்தில் மின்கம்பம் உள்ளது. அந்த பகுதியில் சிலர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் இங்கு குப்பை கழிவுகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. அந்த குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அங்கு குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 3:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35095

சாலையோரம் கிடக்கும் மரத்துண்டுகள்

மற்றவை

பெங்களூரு மாதவாநகர் பகுதியில் சாலையின் ஓரத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அங்கேயே விட்டு சென்றனர். தற்போது அந்த மரத்துண்டுகள் சாலையை ஆக்கிரமித்தவாறு கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick