Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Dec 2022 2:39 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#23127

மலைபோல குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

மலைபோல குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்குப்பை

பெங்களூரு போட்டரி டவுன் பகுதியில் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ஒரு நிலம் உள்ளது. அந்த நிலத்தின் முன்பு உள்ள சாலையில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் இப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு பலகை முன்பே மக்கள் குப்பை கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைபோல குவிந்து கிடக்கிறது. குப்பை கழிவுகளை கால்நடைகள் கிளறி சாலையில் இழுத்து போடுவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:08 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22688

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை கால்வாய் மூடி

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை கால்வாய் மூடிமற்றவை

பெங்களூரு ஜெயமகால் ரோட்டில் பாதாள சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயின் மூடி கடந்த சில தினங்களாக திறந்தே கிடக்கிறது. கால்வாய் மூடியை மூட வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தும் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இரவில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்த சாக்கடை கால்வாயில் தவறி விழும் அபாயமும் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பு சாக்கடை கால்வாய் மூடி மூடப்படுமா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:08 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22687

பழுதடைந்த வாகனங்கள் அகற்றப்படுமா?

பழுதடைந்த வாகனங்கள் அகற்றப்படுமா?மற்றவை

பெங்களூரு நியூ திப்பசந்திரா சிவலிங்கய்யா காலனி பகுதியில் பழுதடைந்த ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அந்த வாகனங்களின் மீது மக்கள் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. வாகனங்களை அங்கிருந்து அகற்றினால் குப்பை கொட்டுவது தடுக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு வாகனங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:07 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22686

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலை

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலைசாலை

பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. தற்போது மகாதேவபுராவில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. அந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் கவனமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று வேகமாக வாகனங்களை ஓட்டினால் சறுக்கி விழும் நிலை உள்ளது. இதனால் சேறும், சகதியுமான சாலைகள் விரைவாக சீரமைத்தால் நன்றாக இருக்கும். இந்த சாலைகள் மீது அதிகாரிகளின் பார்வை திரும்புமா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:07 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22685

உடைந்து கிடக்கும் நடைபாதை

மற்றவை

பெங்களூரு அரகெரே சிக்னல் பகுதியில் சாலையோரம் உள்ள நடைபாதை உடைந்து கிடக்கிறது. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடிவது இல்லை. சாலையில் இறங்கி பாதசாரிகள் நடந்து செல்கின்றனர். இதனால் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் பாதசாரிகள் மீது மோதிவிடும் சூழல் உள்ளது. பாதசாரிகள் உயிரை பாதுகாக்கும் வகையில் நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22683

புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு அஞ்சனபுரா லே-அவுட் 80 அடி சாலை மணலாக காட்சி அளிக்கிறது. அந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதனால் முன்பாக செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். சில சமயங்களில் அங்கு விபத்தும் நடந்து விடுகிறது. அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:55 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22525

உயிர்பலி வாங்க காத்து இருக்கும் சாலை பள்ளம்

உயிர்பலி வாங்க காத்து இருக்கும் சாலை பள்ளம்மற்றவை

பெங்களூரு மாரத்தஹள்ளி மேம்பாலத்தின் கீழே செல்லும் இணைப்பு சாலையில் சில இடங்களில் பள்ளம் விழுந்து உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் வேகமாகவோ, அலட்சியமாகவோ வருபவர்கள் சாலை பள்ளத்தில் வாகனங்களை இறக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. உயிர்பலி வாங்க காத்து இருக்கும் சாலை பள்ளங்களை உடனே மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:55 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22524

நடைபாதை ஆக்கிரமித்து உள்ள தனியார் நிறுவனம்

நடைபாதை ஆக்கிரமித்து உள்ள தனியார் நிறுவனம்மற்றவை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 18-வது கிராஸ் ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து தங்களது வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரிகளிடம், பொதுமக்கள் கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த பிரச்சினையை சரிசெய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22523

சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீர்

கழிவுநீர்

பெங்களூரு தொட்டகம்மனஹள்ளி நோபல் பிரசிடென்சி ரோட்டில் கடந்த சில தினங்களாக சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. அந்த ரோட்டின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர். அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்கின்றனர். பிரச்சினை குறித்து குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் சரிசெய்யவில்லை. இந்த பிரச்சினை தீர்வது எப்போது?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22522

அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக் 20-வது கிராஸ் 10-வது 'ஏ' மெயின் ரோட்டில் ஒரு வழி பாதை உள்ளது. ஆனால் அது ஒரு வழி பாதை என்பதை குறிக்கும் வகையில் அங்கு அறிவிப்பு பலகை இல்லை. இதனால் அந்த சாலையில் எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்கள் சென்று விடுகின்றன. இதனால் குறுகலான அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு உண்டாகிறது. இதனை தவிர்க்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22521

குழி மூடப்படுமா?

குழி மூடப்படுமா?மற்றவை

பெங்களூரு கே.ஆர்.புரம் ஹூடியில் இருந்து அய்யப்பநகருக்கு செல்லும் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் அந்த குழியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. குழி தோண்டப்பட்டு இருப்பதால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அந்த குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 3:35 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22271

சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் கட்டுமான பொருட்கள்

மற்றவை

பெங்களூரு வசந்த்நகர் 1-வது கிராஸ் 12-வது மெயின் ரோட்டில் ஒரு கட்டிடம் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. இதனால் அந்த கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. கட்டுமான பொருட்களை சாலையோரம் வைக்கும்படி வாகன ஓட்டிகள் கூறியும் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த நிறுவனம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick