Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Dec 2022 5:16 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#23708

நீண்ட நாட்களாக அள்ளப்படாத குப்பை

குப்பை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா ராயல்கவுண்டி லே-அவுட் 2-வது குறுக்கு தெருவில் நீண்ட நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. குப்பைகளை அகற்ற மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. குப்பைகளை அகற்ற தூய்மை பணியாளர்களுக்கு, அதிகாரிகள் எப்போது உத்தரவிட போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2022 5:16 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#23707

பகலிலும் ஒளிரும் சாலை விளக்கு

மின்சாரம்

பெங்களூரு சேஷாத்திரிபுரம் சிவானந்தா சர்க்கிள் பகுதியில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மேம்பாலத்தின் இணைப்பு சாலையில் உயர் மின்விளக்கு பொருத்தப்பட்டு உள்ளது. இரவில் போடப்படும் அந்த மின்விளக்குகள் பகலிலும் ஒளிருகிறது. பகலில் மின்விளக்குகளை அணைக்க மின்வாரிய ஊழியர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. மின்சாரம் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2022 5:16 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#23706

குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு ஜே.பி.நகர் 14-வது கிராஸ், 17-வது மெயின் 2-வது பேஜ் சாரக்கி அக்ரஹாரா குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குடியிருப்புவாசிகளுக்கு உடல்நல பிரச்சினையும் ஏற்படுகிறது. குப்பை கழிவுகளை கால்நடைகள் கிளறி சாலையில் போட்டு செல்கின்றன. இதனால் துர்நாற்றமும் வீசுகிறது. குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 2:15 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#23388

நடைபாதையை ஆக்கிரமித்து உள்ள வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு அசோக்நகர் கமிசாரியட் ரோட்டில் ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை ஆக்கிரமித்து கடந்த சில தினங்களாக ஆட்டோ, கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. வாகனங்களை அகற்ற கோரி பொதுமக்கள், போக்குவரத்து போலீசாரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 2:14 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#23387

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

பெங்களூரு உரமாவு லட்சுமய்யா லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன்பு கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. ஆனால் குப்பை கழிவுகளை அள்ளி செல்ல மாநகராட்சி குப்பை வண்டி வரவில்லை. இதனால் குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. குடியிருப்புவாசிகள் நலன் கருதி குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 2:14 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#23385

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை பள்ளம் மூடப்படுமா?சாலை

பெங்களூரு ஒயிட்பீல்டு ஐ.டி.பி.எல். மெயின் சாலையில் பெரிய பள்ளம் விழுந்து உள்ளது. இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனங்களை இறக்கினால் விபத்து நடப்பது உறுதி. பகல் நேரத்திலும் சாலை பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும் சாலை பள்ளத்தை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 2:14 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#23384

மேம்பால சுவரில் வளரும் மரம் வெட்டப்படுமா?

மேம்பால சுவரில் வளரும் மரம் வெட்டப்படுமா?மற்றவை

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள மேம்பால சுவரில் ஒரு மரம் வளர்ந்து வருகிறது. இந்த மரம் பெரியதாக வளர்ந்தால் மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மேம்பாலமும் பாதிக்கப்படும். மேம்பாலத்தின் கீழ் இணைப்பு சாலையும் செல்கிறது. ஒருவேளை மரம் வளர்ந்து வேரோடு சாய்ந்து விழுந்தால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதனால் மரத்தை இப்போதே வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 2:13 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#23383

இணைப்பு சாலையின் மோசமான நிலை

இணைப்பு சாலையின் மோசமான நிலைசாலை

பெங்களூரு மடிவாளாவில் இருந்து சர்ஜாப்புராவுக்கு வெளிவட்ட சாலை செல்கிறது. இந்த சாலையில் எச்.எஸ்.ஆர். லே-அவுட் 1-வது செக்டார் அகரா கிராமம் பகுதியில் இணைப்பு சாலையும் உள்ளது. இந்த இணைப்பு சாலை கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அதாவது சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து மணலாக கிடப்பதுடன், பள்ளமும் விழுந்துள்ளது. இதன்காரணமாக அந்த இணைப்பு சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இணைப்பு சாலை பயன்படுத்தாமல் முக்கிய சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதால் போக்குவரத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 2:40 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#23132

இரும்பு தடுப்பு கம்பி அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு சாங்கி ரோடு ஜவஹர்லால் நேரு கோளரங்கம் பகுதியில் உள்ள நடைபாதையில் போலீசார் இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்து உள்ளனர். அந்த கம்பிகள் நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளன. இரும்பு கம்பிகள் இருப்பதை கவனிக்காமல் நடந்து செல்லும் பாதசாரிகள் அவற்றின் மீது மோதி காயம் அடைகின்றனர். பாதசாரிகளை பாதுகாக்கும் வகையில் இரும்பு தடுப்பு கம்பிகள் அகற்றப்படுமா?.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 2:40 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#23131

குண்டும், குழியுமான சாலை

சாலை

பெங்களூரு சிவாஜிநகர் போட்டி மார்க்கெட் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலையின் மோசமான நிலையால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையில் உள்ள பள்ளங்களை மூடுவதுடன், தரமான சாலை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 2:39 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#23130

கழிவறையாக மாறிய நடைபாதை

மற்றவை

பெங்களூரு கூக்கி டவுன் பாலாஜி லே-அவுட் மெக்பேர்சன் சாலையில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையில் இரவு நேரத்தில் விஷமிகள் சிறுநீர் கழித்து செல்கின்றனர். இதனால் நடைபாதை கழிவறையாக மாறிவிட்டது. பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடிவது இல்லை. நடைபாதையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. நடைபாதையில் சிறுநீர் கழிக்கும் விஷமிகளை பிடித்து அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 2:39 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#23129

நடைபாதையில் கிடக்கும் ராட்சத குழாய்கள்

நடைபாதையில் கிடக்கும் ராட்சத குழாய்கள்மற்றவை

பெங்களூரு பெல்லந்தூர் டாக்டர் புனித் ராஜ்குமார் ரோட்டில் ஈகோ ஸ்பேஸ் சாலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இந்த பணிக்கு பயன்படுத்தப்பட்ட ராட்சத குழாய்கள் நடைபாதையில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடிவது இல்லை. பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விபத்தை தடுக்க ராட்சத குழாய்கள் அகற்றப்படுமா?.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick