Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 April 2023 5:14 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#31706

குவிந்து கிடக்கும் கழிவுகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் மரியப்பனபாளையா எம்.கே.கே. சாலையில் ஏராளமான இடங்களில் குப்பை கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. தூய்மை பணியாளர்கள் அந்த கழிவுகளை சரியாக அகற்றுவது இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. குவிந்து கிடக்கும் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுவார்களா?.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 3:30 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31641

நடைபாதையில் தோண்டப்பட குழிகள் மூடப்படுமா?

மற்றவை

பெங்களூரு மாநகராட்சி சார்பில் லால்பாக் ரோடு, கே.ஆர் ரோடு, சங்கர் மடம் ரோடு, பசவனகுடி ஆகிய பகுதிகளில் புதிதாக தெரு மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நடைபாதையில் குழிதோண்டி தெரு மின்விளக்குகள் அமைக்க இரும்பு கம்பம் நடப்பட்டு வருகிறது. ஆனால் சில இடங்களில் நடைபாதையில் தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து சீரமைப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 3:30 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31640

பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

சாலை

பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக் 33-வது கிராஸ் பகுதியில் சாலையின் இருபுறமும் நடைபாதைகள் இல்லை. சாலையோரம் நடந்து செல்ல முடியாத வகையில் கார்கள் உள்ளிட்ட வாகனங்களையும் நிறுத்தி இருக்கிறார்கள். இதனால் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் நடைபாதை அமைக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 3:29 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31639

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு அல்சூர் அருகே ஜோகுபாளையா பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருகிறார்கள். இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 3:28 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31638

நடைபாதையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்

மற்றவை

பெங்களூரு குரும்பிகல் ரோட்டில் அமைந்திருக்கும் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையை தோண்டி அங்கு கான்கிரீட் தூண் அமைத்துள்ளனர். இதை யார் அமைத்தது, எதற்காக அமைத்தனர், நடைபாதையில் தூண் அமைக்க அவர்கள் யார் அதிகாரம் கொடுத்தது என்பது தெரியவில்லை. இதுபற்றி பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நடைபாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 2:46 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31381

மரக்கிளைகளை வெட்ட எதிர்ப்பு

மற்றவை

பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் சாலையின் ஓரங்களில் மரங்கள் அதிகம் உள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நிழலில் நின்று செல்கின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் சிலர், அங்குள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றி வருகின்றனர். இதற்கு அந்த பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் மரக்கிளைகளை வெட்டும் பணியை விரைவாக நிறுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 2:44 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31379

சேறும், சகதியுமாக கிடக்கும் சாலை

சேறும், சகதியுமாக கிடக்கும் சாலைசாலை

பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் 5-வது பிளாக் சாலை சேதமடைந்துள்ளது. அந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 2:43 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31378

சாலையோரம் நிற்கும் லாரிகள்

மற்றவை

பெங்களூரு மாதநாயக்கனஹள்ளி 3-வது கிராசில், உள்ள சாலை குறுகலானது ஆகும். அந்த சாலையின் ஓரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் பிற வாகனங்களால் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். இதற்காக அவர்கள் 2 சாலைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த சாலையில் இதுபோன்ற பெரிய லாரிகளை நிறுத்த தடை விதிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 2:42 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31376

நடைபாதையில் நிறுத்தப்படும் கார்கள்

சாலை

பெங்களூரு இந்திராநகர் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்த கடைகள் முன்பு பாதசாரிகள் வசதிக்காக நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நடைபாதையில் கடைகளுக்கும் வரும் சிலர் தங்கள் கார்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். அந்த சமயத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மோதி அவர்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 2:41 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31375

மின்கம்பிகளால் ஆபத்து

மின்சாரம்

பெங்களூரு விஜயநகர் பகுதியில் சாலையோர நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. அதில் மின்கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் உள்ளன. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகள் நடந்து செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, அந்த கம்பிகளை அகற்ற பெஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 3:13 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31203

வாகனங்கள் அகற்றப்படுமா?

வாகனங்கள் அகற்றப்படுமா?போக்குவரத்து

பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஓட்டல் முன்பு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையின் குறுக்கே ஓட்டலுக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் அவர்கள் இதற்காக சாலையில் ஆபத்தான முறையில் இறங்கி நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 3:12 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31202

ஏரியில் குவிக்கப்படும் கட்டிட கழிவுகள்

மற்றவை

பெங்களூரு கிதிகனூர் பகுதியில் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியின் ஒரு பகுதியில் கட்டிட கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் ஏரி ஆக்கிரமிக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள், ஏரியில் கட்டிட கழிவுகள் கொட்டுப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியை மீட்டு வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick