Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 July 2022 12:45 PM GMT
| உதகமண்டலம்
#4609

மழைநீர் தேங்குவதால் அவதி

போக்குவரத்து

ஊட்டி உழவர் சந்தை முன்புறம் உள்ள பகுதி பள்ளமாக இருப்பதால் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே அந்த இடத்தில் உள்ள பள்ளத்தை சரி செய்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:44 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#4608

அடிக்கடி மின்தடை

மின்சாரம்

கோவை கோவைப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த பகுதிகளில் காற்று வீசும் போது மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே மின்தடையை தவிர்க்க மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:43 PM GMT
| இராணிப்பேட்டை
#4607

மண் கடத்தலை தடுப்பார்களா?

மற்றவை

ராணிப்பேட்டை தாலுகா வாலாஜா தாலுகா அனந்தலை கிராமம் ஆனந்தநாதீஸ்வரர் கோவில் மலைக்கு கீழே அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் பொக்லைன் எந்திரம் உதவியோடு மண் அள்ளி வாகனங்களில் ஏற்றி செங்கல் சூளைக்கு கடத்தப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மணி, அனந்தலை. 6382275995

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:40 PM GMT
| குளித்தலை
#4604

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பொன்னம்பட்டி செல்லும் தார் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த கரடுமுரடான சாலையில் செல்லும்போது வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் சைக்கிளில் தட்டு தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:39 PM GMT
| சோளிங்கர்
#4603

பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும்

பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும்பூங்கா

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஜே.சி.கே.நகரில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவில் புல், புதர்கள் வளர்ந்துள்ளது. விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்தப் பூங்காவை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புல், புதர்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய முன்வர வேண்டும்.-பொதுமக்கள், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:36 PM GMT
| அரக்கோணம்
#4601

கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்வார்களா?

கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்வார்களா?கழிவுநீர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பாப்பான் குளம் திருத்தணி பிரதான சாலையில் அரசு ஆரம்பப் பள்ளி எதிரே பாதாள சாக்கடை மேன் ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சரி செய்யுமா? -துரைபாபு, அரக்கோணம். 9894266517

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:33 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#4599

கடும் துர்நாற்றம்

மற்றவை

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் சரிவர சுத்தம் செய்யப்படாததால் அதன் அருகில் செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சிறுநீர் கழிப்பிடத்தை தினமும் சுத்தம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:28 PM GMT
| குன்னூர்
#4597

வனவிலங்குகளின் புகலிடம்

வனவிலங்குகளின் புகலிடம்மற்றவை

கோத்தகிரி காந்தி மைதானத்தில் ஆண்டு முழுவதும் ஏராளமான விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மைதானத்தின் ஒரு பகுதி முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காட்டெருமைகள், காட்டுப்பன்றிகளின் புகலிடமாக மாறியுள்ளது. எனவே வீரர்கள் அச்சத்துடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டி உள்ளதால் புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:26 PM GMT
| ஆம்பூர்
#4596

செடி, கொடிகளை அகற்றுவார்களா?

செடி, கொடிகளை அகற்றுவார்களா?மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் 23-வது வார்டு நடராஜபுரம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் செல்லும் காணாறு உள்ளது. அதில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. எங்கள் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் மழைநீர் விரைந்தோட காணாற்றில் வளர்ந்துள்ள செடி,கொடிகளை நகராட்சி நிர்வாகம் பொக்லைன் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், நடராஜபுரம் ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:22 PM GMT
| ஜோலார்பேட்டை
#4593

சாய்ந்து கிடக்கும் குப்பை தொட்டி

சாய்ந்து கிடக்கும் குப்பை தொட்டிகுப்பை

நாட்டறம்பள்ளியை அடுத்த பூசாரியூர் பகுதியில் ஜோலார்பேட்டை-நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் சாலை ஓரமாக குப்பைத் தொட்டிகள் கவிழ்ந்த நிலையில் உள்ளது. குப்பைத் தொட்டியை சரியாக வைத்தால் குப்பைகள் கொட்ட வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-உமாராணி. நாட்டறம்பள்ளி.9629027741

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:19 PM GMT
| இலால்குடி
#4590

கருவேல மரங்களால் காயம் அடையும் மக்கள்

கருவேல மரங்களால் காயம் அடையும் மக்கள்போக்குவரத்து

திருச்சி-சிதம்பரம் சாலையில் லால்குடி-பூவாளூர் இடையே சாலையின் இருபுறத்திலும் கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பஸ்களில் பயணம் செய்யும்போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மீது முட்கள் அடிக்கிறது. இதனால் அவர்கள் காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் சாலையோரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது சாலையோரம் ஒதுங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:19 PM GMT
| புதுக்கோட்டை
#4589

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்மின்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வம்பன்நால்ரோடு ஆலங்குடி மெயின் ரோட்டில் உள்ள வயல் பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றது. விவசாய தொழிலாளர்கள் விவசாய பணியில் ஈடுபடும்போது அவர்கள் மீதோ அல்லது உழவு எந்திரங்கள் மீதோ இந்த மின்கம்பிகள் பட்டால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick