Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 July 2022 3:11 PM GMT
| பெரம்பலூர்
#5326

கோவிலுக்கு செல்ல பக்தர்கள் சிரமம்

சாலை

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி கோவில் அருகே உள்ள மலைப்பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக பக்தர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்‌ புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 2:42 PM GMT
| வேலூர்
#5312

நாய் தொந்தரவு

மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2, 5-வது மெயின் ரோட்டில் இரவு நேரத்தில் அதிகமான நாய்களால் பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது.. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பார்களா??

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 2:39 PM GMT
| பெங்களூரு
#5310

சுவரில் சுற்றி கிடக்கும் கேபிள் வயர்கள்

மின்சாரம்

பெங்களூரு அசோக்நகர் பிரிம்ரோஸ் ரோட்டில் ஒரு தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தின் சுவரில் ஏராளமான கேபிள் வயர்கள் சுற்றி கிடக்கிறது. சில வயர்கள் அறுந்து விழும் நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் வயர்களை கவனிக்காமல் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு கேபிள் வயர்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த மின்வயர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 2:39 PM GMT
| பெங்களூரு
#5309

சாலையின் மோசமான நிலை

சாலையின் மோசமான நிலைசாலை

பெங்களூரு கோரமங்களா 100 அடி சாலையில் மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அந்த 100 அடி சாலை மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அதாவது சாலையின் பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 2:39 PM GMT
| பெங்களூரு
#5308

போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் டோயிங் வாகனங்கள்

போக்குவரத்து

பெங்களூரு ரிச்மண்ட் ரோட்டில் உள்ள சிக்னல் அருகே சாலையோரம் 2 டோயிங் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் அந்த டோயிங் வாகனங்கள் அருகே தடுப்பு கம்பிகளும் வைக்கப்பட்டு உள்ளது. எதிர்திசையில் இருந்து வந்து திரும்பும் வாகனங்களுக்கு அந்த டோயிங் வாகனங்கள் பெரும் இடையூறாக உள்ளன. இதனால் அந்த டோயிங் வாகனங்களை வேறு பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 2:39 PM GMT
| பெங்களூரு
#5307

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

பெங்களூரு அரகெரே பி.டி.எஸ். லே-அவுட் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகின்றன. தற்போது அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் குழி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் குழிகளில் வாகனங்களை இறக்கி விடுகின்றனர். இதனால் கட்டுப்பாட்டை இழக்கும் இருசக்கர வாகனங்கள் சாலையில் கவிழும் நிலையும், வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் சாலையில் உள்ள குழிகளை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 2:38 PM GMT
| பெங்களூரு
#5306

நடைபாதையில் குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

பெங்களூரு சேஷாத்திரிபுரம் ரெயில்வே பாரலல் ரோட்டில் உள்ள நடைபாதையில் குப்பை குவிந்து கிடக்கிறது. அந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்கிறார்கள். இதனால் நடைபாதையில் இருந்து தினமும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 2:29 PM GMT
| பெரம்பலூர்
#5305

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சி 6-வது வார்டில் உள்ள எஸ்.பி.டி. மருத்துவமனை சாலை சிதிலமடைந்து மண் சாலையாக உள்ளதால் தற்போது பெய்த மழையினால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 2:24 PM GMT
| குன்னம்
#5303

குடிநீர் இன்றி மக்கள் அவதி

தண்ணீர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். மேலும் குன்னம் சட்டமன்றத் தொகுதியாகவும் உள்ளது. இங்கு10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 2:21 PM GMT
| குன்னம்
#5302

குண்டும், குழியுமான சாலை

சாலை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் ஒதியம் சமத்துவபுரம் பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குண்டும், குழியுமான சாலையில் செல்லும்போது வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 1:00 PM GMT
| சேலம்-வடக்கு
#5265

ஆமை வேகத்தில் மேம்பால பணி

போக்குவரத்து

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை தவிர்க்கும் வகையில் அங்கு ரெயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மேம்பால பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை வேண்டும்.-சாமுவேல், முள்ளுவாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 12:43 PM GMT
| கள்ளக்குறிச்சி
#5260

சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்மற்றவை

கச்சிராயப்பாளையம் அருகே மண்மலை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த அலுவலக கட்டிடம் தற்போது பலத்த சேதம் அடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அங்கு செல்லவே அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick