Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Dec 2022 3:53 PM GMT
துரைசாமி | பழநி
#23161

தெருவில் செல்லும் கழிவுநீர்

தெருவில் செல்லும் கழிவுநீர்கழிவுநீர்

பழனி நகராட்சி 19-வது வார்டு கிழக்கு கவுண்டம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் சாக்கடை செல்ல வழியின்றி அருகே உள்ள குடிநீர்த்தொட்டி பகுதியில் தேங்குகிறது. மேலும் பாதையில் கழிவுநீர் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்றும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 3:52 PM GMT
துரைசாமி | பழநி
#23160

தேங்கி கிடக்கும் குப்பைகள்

குப்பை

பழனி முருகன் கோவிலுக்கு தற்போது அய்யப்ப பக்தர்கள் அதிகமாக சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் அடிவாரம் மற்றும் கிரிவீகளில் உள்ள ஓட்டல் மற்றும் பழக்கடைக்காரர்கள் சேகரமாகும் குப்பைகளை சாலையோரங்களில் ஆங்காங்கே கொட்டுகின்றனர். அவை முறையாக அகற்றப்படாமல் உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலம் என்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 2:57 PM GMT
துரைசாமி | பழநி
#22928

கழிப்பறை கட்டிடம் திறக்கப்படுமா?

மற்றவை

பழனியை அடுத்த மேலக்கோட்டை ஊராட்சி வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட கழிப்பறைகள் கட்டியது முதல் தற்போது வரை பூட்டியே உள்ளது. இதனால் அங்கு திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிப்பறை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 2:54 PM GMT
துரைசாமி | பழநி
#22927

சேதமான சாலையால் தொடர் விபத்து

சாலை

பழனி காமராஜ் நகரில் பொள்ளாச்சி சாலை-தாராபுரம் சாலை சந்திப்பு வளைவு பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வாகன விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குறிப்பாக வளைவில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பள்ளம் தெரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட 2 விபத்துகள் ஏற்பட்டதில் ஒருவர் பலியாகி உள்ளார். எனினும் வளைவு பகுதியை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பாதுகாப்பு கருதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:30 PM GMT
துரைசாமி | ஒட்டன்சத்திரம்
#22714

சாலை சேதம்

சாலை

பழனி அருகே உள்ள வத்தகவுண்டன்வலசு கிராமத்தில் இருந்து அமரபூண்டி செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த வழியே செல்ல மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 4:38 PM GMT
துரைசாமி | பழநி
#22555

தேங்கும் கழிப்பறை தண்ணீர்

தேங்கும் கழிப்பறை தண்ணீர்கழிவுநீர்

பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பாரதிநகரில் உள்ள கழிப்பறை செப்டிக் டேங்க்கல் இருந்து கழிவுநீர் வெளியேறி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சாலையோரம் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 4:37 PM GMT
துரைசாமி | பழநி
#22554

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

பழனியில் உள்ள பழனியாண்டவர் பூங்கா அருகே சிவகிரிபட்டி பைபாஸ் சாலையோரம் மர்ம நபர்கள் உணவு கழிவுகள், பழக்கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியை கடக்கும்போது கடும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட சிவகிரிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 3:50 PM GMT
துரைசாமி | பழநி
#22276

பராமரிப்பு இல்லாதசிலை

மற்றவை

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோவில் அருகே உள்ள காமராஜர் சிலை போதிய பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலையை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 4:19 PM GMT
துரைசாமி | பழநி
#22064

விபத்தை ஏற்படுத்தும் பாலம்

சாலை

நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பாரதி நகரில் சாலையின் நடுவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பாலம் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 4:15 PM GMT
துரைசாமி | பழநி
#20865

அடிக்கடி ஏற்படும் மின்தடை

மின்சாரம்

பழனி அருகே உள்ள ராசாபுரத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் மின்விசிறி பயன்படுத்த முடியாமல் அவதிஅடைகின்றனர். அதே நேரத்தில் காற்றுக்காக கதவை திறந்து வைத்தால் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே மின்தடையை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 4:31 PM GMT
துரைசாமி | பழநி
#20659

தேங்கி கிடக்கும் குப்பைகள்

சாலை

பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் ஊராட்சி அழகாபுரி பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:17 PM GMT
துரைசாமி | பழநி
#20457

சாலையில் பள்ளம்

சாலை

பழனி பெரியகடைவீதி நேதாஜி சிலை அருகே வளைவு பகுதியில் சாலையின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலை பள்ளத்தை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick