Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Sep 2022 2:47 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12187

பகலிலும் ஒளிரும் தெருவிளக்குகள்

பகலிலும் ஒளிரும் தெருவிளக்குகள்மின்சாரம்

பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக் 10-வது சி மெயின் ரோட்டில் தெருவிளக்கு உள்ளது. இந்த தெருவிளக்குகள் இரவு முழுவதும் ஒளிரவிடப்படுகின்றன. ஆனால் பகலில் அந்த தெருவிளக்குகளை அணைக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் பகலிலும் தெருவிளக்குகள் தேவையின்றி ஒளிருகின்றன. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் பகல் நேரத்தில் தெருவிளக்குகளை அணைக்க மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 2:46 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12186

சாலைகளின் மோசமான நிலை

சாலை

பெங்களூரு பனசங்கரி 6-வது ஸ்டேஜில் உள்ள சாலைகள் நிலை சொல்லொண்ணா துயரத்தில் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலைகள் பாதி பெயர்ந்து கிடக்கிறது. ஒரு சில இடங்களில் சாலை அரித்து உள்ளது. இரவில் அந்த சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. உயிர்பலி ஏற்படும் முன்பு அந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 2:46 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12185

உடைந்து கிடக்கும் ராஜகால்வாய் தடுப்பு சுவர்

மற்றவை

பெங்களூரு சில்க்போர்டு ஜங்ஷன் சந்திப்பில் இருந்து மடிவாளா செல்லும் சாலையோரம் ராஜகால்வாய் ஓடுகிறது. தற்போது பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் அந்த ராஜகால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் அந்த ராஜகால்வாயின் தடுப்பு சுவர் சில இடங்களில் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த ராஜகால்வாய்க்குள் கால்நடைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க ராஜகால்வாய் சுவர்களை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 2:45 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12184

ஏரிக்கரையில் குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

குப்பை

பெங்களூரு சர்ஜாபுரா ரோடு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் ஒரு ஏரி உள்ளது. அந்த ஏரியின் கரையோரம் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் ஏரியையொட்டியுள்ள நடைபாதையிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. ஏரியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏரிக்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 3:13 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11748

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்ட்ரெண்டிங்

பெங்களூரு மடிவாளாவில் இருந்து சில்க் போர்டு செல்லும் சாலையில் சிலர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 3:13 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11747

ஆமை வேகத்தில் நடைபெறும் நடைபாதை பணிகள்

ஆமை வேகத்தில் நடைபெறும் நடைபாதை பணிகள்மற்றவை

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் இருந்து மடிவாளா செல்லும் சாலையில் சிக்னல் ஒன்று உள்ளது. இந்த சிக்னல் அருகே நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், அந்த பகுதியினர் மற்றும் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 3:13 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11746

நீண்ட நாட்களாக நிற்கும் கார்

போக்குவரத்து

பெங்களூரு பசவநகர் 7வது கிராஸ் பகுதியில் சாலையோரம் ஒரு கார் நிறுத்தப்பட்டு உள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக அந்த கார் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 3:13 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11745

சுரங்கப்பாதை பராமரிப்பு பணி மந்தம்

சாலை

பெங்களூரு கெங்கேரி பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. அந்த சாலையை வாகன ஓட்டிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணிகள் தொடங்கியது. பல நாட்கள் ஆகியும் அந்த பணிகள் முடிக்கப்படவில்லை. மந்த கதியில் அந்த பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 3:12 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11744

சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழி

போக்குவரத்து

பெங்களூரு சககாரா நகர் பகுதியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழி உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த சாக்கடை கால்வாய் மீது ேபாடப்பட்டு இருந்த மூடி மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாக்கடை கால்வாய் மூடியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:20 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11564

நடைபாதையில் கிடக்கும் ஜல்லி கற்கள்

நடைபாதையில் கிடக்கும் ஜல்லி கற்கள்ட்ரெண்டிங்

பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் போலீஸ் நிலையம் அருகே சாலையோர நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அந்த ஜல்லி கற்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:20 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11563

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிபோக்குவரத்து

பெங்களூரு பன்னாரகட்டா செல்லும்சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு விழுந்த இந்த பள்ளம் இன்றுவரை சரிசெய்யப்பட வில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தால் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலை பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:19 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11562

நடைபாதையின் குறுக்கே பேனர்

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் 1வது பிளாக் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியில் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் குறுக்கே பேனர் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடிவதில்லை. இதனால் அவர்கள் சாலையில் இறங்கி செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பேனரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick