Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2022 3:34 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13669

பஸ் நிலையத்தில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

கழிவுநீர்

பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக பஸ் நிலையத்தில் குடிநீர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மையத்தின் அருகே அதாவது பஸ் நிலையத்திற்குள் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அந்த கழிவுநீரில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் பயணிகளை கடித்து வருகிறது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. பயணிகள் நலனை பாதுகாக்கும் வகையில் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 3:33 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13668

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து

பெங்களூரு ரெசிடென்சி ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒரு பகுதியாகும். இந்த நிலையில் அந்த ரோட்டில் ஒரு இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை என்று பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு பலகை முன்பே சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சாலையில் வாகனங்களை தேவையின்றி நிறுத்தி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 3:33 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13667

நடைபாதையில் கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு பழைய விமான நிலைய சாலை எச்.ஏ.எல். பகுதியில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் குப்பை கழிவுகளை கொட்டி செல்கின்றனர். அந்த குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால் அந்த நடைபாதையில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. குப்பையில் இருந்து துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், நடைபாதையில் குப்பை கழிவு கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 3:26 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13436

மெஜஸ்டிக் பஸ் நிலைய பள்ளம் மூடப்படுமா?

மெஜஸ்டிக் பஸ் நிலைய பள்ளம் மூடப்படுமா?மற்றவை

பெங்களூரு நகரின் இதய பகுதியாக மெஜஸ்டிக் விளங்குகிறது. மெஜஸ்டிக்கில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வரும் பகுதியில் பள்ளம் விழுந்து உள்ளது. தற்போது அந்த பள்ளத்திற்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை பள்ளம் டிரைவர்களுக்கு தெரிவது இல்லை. பஸ்களை பள்ளத்திற்குள் இறக்கிவிடுவதால் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும் பயணிகள் சாலையில் தவறி விழும் நிலை உள்ளது. இதனை தடுக்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 3:25 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13435

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

பெங்களூரு பனசங்கரி 2-வது ஸ்டேஜ் பவானிநகர் பகுதியில் சாலையோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. அந்த குப்பைகளை மாடுகள், தெருநாய்கள் கிளறுகின்றன. சாலை வரை குப்பை பரவி கிடப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பாதசாரிகளும் நடந்து செல்கின்றனர். குப்பையில் இருந்து தூர்நாற்றம் வீசுவதால் மக்கள் மூக்கை பிடித்து கொண்டே செல்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-----------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 3:25 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13434

பராமரிப்பு இன்றி கிடக்கும் டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

பெங்களூரு பி.வி.ஆர். ரோட்டில் உள்ள ஜாலிமொகல்லா பகுதியில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. டிரான்ஸ்பார்மரின் கதவுகள் உடைந்து உள்ளன. மின்வயர்கள் அறுந்து வெளியே தொங்குகின்றன. சில நேரங்களில் டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறிகள் பறக்கிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் டிரான்ஸ்பார்மரை பராமரிக்க பெஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 3:25 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13433

பூங்காவின் மோசமான நிலை

பூங்கா

பெங்களூரு ஜெயநகர் 8-வது பிளாக் 3-வது மெயின் ரோடு 43-வது கிராஸ் பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் வயதானவர்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. அதாவது பூங்காவில் குப்பைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இது நடைபயிற்சி செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. மோசமான நிலையில் உள்ள பூங்காவை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 3:24 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13432

பூங்காவில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

கழிவுநீர்

பெங்களூரு நாகசந்திரா எச்.எம்.டி. லே-இவுட்டில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்குள் கடந்த சில தினங்களாக கழிவு மற்றும் அசுத்த நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. பூங்காவுக்குள் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற கோரி பூங்காவில் நடைபயிற்சி ஈடுபடுவோர் கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்வது இல்லை. கழிவுநீரை அகற்ற குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 4:30 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13269

சாலையில் தேங்கிய மழைநீர்

சாலையில் தேங்கிய மழைநீர்மற்றவை

பெங்களூரு சர்ஜாப்புரா சாலையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் அந்த சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடக்கிறது. தேங்கிய மழைநீர் வடியாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 4:30 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13268

மலைபோல் கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு பசவனகுடியில் முக்கிய சாலைகளில் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் அந்த சாலையோரங்களில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 4:30 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13266

விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் பள்ளங்கள்

விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் பள்ளங்கள்சாலை

பெங்களூரு சர்ஜாப்புரா மேம்பாலம் அருகே செல்லும் சாலையில் சில பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் அந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்க வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலை பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 4:29 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13264

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளம்

மற்றவை

பெங்களூரு சதாசிவாநகர் 5வது கிராஸ் பகுதியில் உள்ள சாலையில் பராமரிப்பு பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது அந்த பள்ளம் முறையாக மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick