14 Jan 2024 7:50 AM GMT
#43609
விபத்து அபாயம்
மணவாளக்குறிச்சி
தெரிவித்தவர்: ராஜேஷ்கோபால்
மணவாளக்குறிச்சி பிரதான சாலையில் சந்தை உள்ளது. இதனால், இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இந்த சாலையில் வரும் வாகனங்கள் அதிவேகமாகவும், ஹாரன் ஒலி எழுப்பாமலும், போக்குவரத்து விதியை கடைபிடிக்காமலும் எதிர் திசையில் வருகின்றனர். இதனால், சந்தைக்கு வரும் பொதுமக்கள், சிறு குழந்தைகள் சிரமத்துக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சந்தை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஒரு காவலரை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.