21 Jan 2024 7:12 AM GMT
#43754
சுகாதாரக்கேடு
அச்சன்புதூர்
தெரிவித்தவர்: முகம்மது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா நெடுவயல் பஞ்சாயத்தில் அமைக்கப்பட்ட வாறுகாலானது அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நிறைவடைகிறது. இதனால் பள்ளிக்கூடம் முன்பாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள கோவிலுக்கும் இந்த வழியாகத்தான் பக்தர்கள் செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.