திருவாரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Rameshkani 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மணக்கால் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு மற்றும் பள்ளி வளாகங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் தேங்கும் தண்ணீரால் பள்ளி கட்டிடங்கள் சேதம் அடையும் அபாயம் உள்ளது. தண்ணீர் வடிவதற்கான வாய்க்கால்கள் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் கருவேலை மரங்கள் மற்றும் புதர் செடிகள் மண்டி கிடக்கிறது. இதுபற்றி தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன் வாய்க்காலை தூர்வாரி நீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- பொதுமக்கள், மணக்கால் ஊராட்சி





