Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Feb 2025 10:07 AM GMT
Mr.V.Ramachandran
#53957

கடும் துர்நாற்றம்

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு நேரு நகர் 2-வது வீதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இதன் அருகில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் கழிவுகள் நிறைந்து பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி கால்வாயில் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 10:06 AM GMT
Mr.V.Ramachandran
#53956

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூரில் இருந்து சின்னியம்பாளையத்துக்கு சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதில் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அங்கு புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு கொட்டப்பட்டு உள்ள குப்ைபகளை உடனடியாக அகற்ற வேண்டும். மீண்டும் குப்பை கொட்டாமல் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 11:44 AM GMT
Mr.V.Ramachandran
#53783

மேம்பாலத்தில் சாலை சேதம்

சாலை

கோவை ஒண்டிபுதூரில் இருந்து காமாட்சிபுரம் செல்லும் வழியில் உள்ள மேம்பாலத்தின் நடுவே சாலையில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதம் அடைந்து உள்ளது. அவை அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த பகுதியை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 11:43 AM GMT
Mr.V.Ramachandran
#53782

குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம்

கழிவுநீர்

அன்னூர் அருகே கொண்டையம்பாளையம் அருகே வரதய்யங்கார்பாளையம் நால்ரோடு சந்திப்பில் குடிநீர் குழாய்கள் சாக்கடை கால்வாயில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 11:34 AM GMT
Mr.V.Ramachandran
#53781

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் வழியாக ஏலமன்னா, கொளப்பள்ளி செல்லும் இணைப்பு சாலையானது பல இடங்களில் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அதுவும் மழை பெய்துவிட்டால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 11:34 AM GMT
Mr.V.Ramachandran
#53780

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் எஸ்.எஸ்.எஸ். அவென்யூ பகுதியில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் குப்ைபகளும், மண்ணும் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கால்வாயில் கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி நிற்கிறது. அதில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 12:38 PM GMT
Mr.V.Ramachandran
#53631

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

கோவையை அடுத்த கோவைப்புதூர் அருகே குளத்துப்பாளையம் எஸ்.எஸ்.எஸ். அவென்யூ பகுதியில் மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கிறது. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது, தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள் மீது உரசி மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்சாரவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 12:37 PM GMT
Mr.V.Ramachandran
#53629

பழுதான ெதருவிளக்குகள்

மின்சாரம்

பந்தலூர் அருகே ஏலமன்னா சோதனைச்சாவடியில் இருந்து நெல்லியாளம் டேன்டீ செல்லும் சாலையோரத்தில் தெருவிளக்குகள் பழுதாகி காணப்படுகிறது. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்குள்ள தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 12:37 PM GMT
Mr.V.Ramachandran
#53628

கால்வாயில் அடைப்பு

கழிவுநீர்

கிணத்துக்கடவு தாலுகா தேவராயபுரம் ஊராட்சி வடக்கு நல்லிகவுண்டன்பாளையத்தில் விநாயகர் கோவில் முன்பு ஊராட்சி சார்பில் போர்வெல் அமைக்கப்பட்டது. அதில் இருந்து எடுத்த மண்ணை அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டனர். இதனால் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் மண் விழுந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த கால்வாயை தூர்வாரி மண்ணை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 12:36 PM GMT
Mr.V.Ramachandran
#53626

உடைந்து கிடக்கும் சாக்கடை

கழிவுநீர்

வடவள்ளி பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் வீதி காய்கறி சந்து தெருவில் பாதாள சாக்கடை உடைந்து கிடக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக இதே நிலைதான் தொடர்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடையை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 12:35 PM GMT
Mr.V.Ramachandran
#53624

ஆபத்தான மரம்

மற்றவை

கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து பழைய சார்நிலை கருவூலம் செல்லும் வழியில் சர்வீஸ் சாலையோரம் ‘மே பிளவர்’ மரம் ஒன்று மேடான பகுதியில் நிற்கிறது. இந்த மரத்தின் அடிப்பாகம் வலுவிழந்த நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மரம் சாய்ந்து சாலையில் விழலாம். எனவே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி ஆபத்தான அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 10:58 AM GMT
Mr.V.Ramachandran
#53404

வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

சாலை

பந்தலூர் தாலுகா சேரம்பாடி போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. ஆனால் அங்கு வேகத்தடைகள் எதுவும் இல்லை. இதனால் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கு விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே போலீஸ் நிலையம் முன்பு வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick