Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Sep 2022 9:06 AM GMT
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#12668

அகற்ற வேண்டிய மின்கம்பம்

அகற்ற வேண்டிய மின்கம்பம்மின்சாரம்

காட்டாத்துறை சந்திப்பில் இருந்து மருதூர்குறிச்சி செல்லும் சாலையில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அருகே பூவன்விளைதெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகளில் வெடிப்பு ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, இந்த மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். த.சுந்தர்ராஜ், காட்டாத்துறை. 97860 30274

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 8:36 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#12463

சாலையோரம் ஆபத்து

சாலையோரம் ஆபத்துசாலை

நாகர்கோவிலில் கோட்டார் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் சாலையோரம் மிகவும் ஆபத்தான நிலையில் பள்ளம் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கின்றனர். சாலையோரம் பள்ளம் இருப்பதால் பொதுமக்கள் தவறி விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேவியர், நாகர்கோவில்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 8:33 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#12462

செடிகள் அகற்றப்பட்டது

செடிகள் அகற்றப்பட்டதுமற்றவை

மணவாளக்குறிச்சி சந்திப்பில் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெட்டி உள்ளது. இதனை சரியாக பராமரிக்காததால் சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர்களாக மாறி வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடிகளை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 7:22 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#12461

பஸ் சரியாக இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாகர்கோவிலில் இருந்து செட்டிகுளம், பீச்ரோடு, என்.ஜி.ஓ.காலனி வழியாக மணக்குடிக்கு 36பி பஸ் செல்வது வழக்கம். தற்போது இந்த பஸ் மாலையில் இயக்கப்படுவதில்லை. இதனால், இந்த பஸ்சை நம்பியிருந்த புத்தளம், வல்லன்குமாரன்விளை போன்ற பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புத்தளத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் சேதுபதியூருக்கு நடந்து செல்கிறார்கள். எனவே, மாணவர்கள் நலன்கருதி இந்த பஸ்சை மாலை நேரங்களில் முறையாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நிர்மலா, புத்தளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 9:18 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#12250

பகலில் ஒளிரும் விளக்கு

பகலில் ஒளிரும் விளக்குமின்சாரம்

குளச்சல் நகராட்சி உட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் பல நாட்களாக பகல் நேரங்களில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், மின்சாரம் வீணாகுவதுடன் அந்த விளக்கு விரைவில் பழுதடைய வாய்ப்பு உள்ளது. எனவே, தெருவிளக்கை இரவில் எரிய வைத்து பகலில் அணைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -எஸ். முகமது சபீர், குளச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 9:17 AM GMT
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#12249

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

காட்டாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சாமியார்மடத்தில் ஊரக தினசரி சந்தை உள்ளது. இந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை சரியாக பராமரிக்கப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவறைைய சுத்தம் செய்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆர். வசந்தகுமார், சாமியார்மடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 9:14 AM GMT
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#12248

அகற்ற வேண்டிய மரம்

அகற்ற வேண்டிய மரம்மற்றவை

அழகியமண்டபத்தில் இருந்து மேக்காமண்டபம் செல்லும் சாலையில் காட்டாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகில் ஒரு பனைமரம் மிகவும் உயரமாக வளர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மரத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள், மின்கம்பிகள் உள்ளன. காற்றுமழைக்காலங்களில் மரம் முறிந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -ஆலிவர். அழகியமண்டபம். 89038 3619689038 36196

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 9:10 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#12247

குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் தட்டுப்பாடுதண்ணீர்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் மணியாநகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பேரூராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு இதுவரை கொடுக்கப்படவில்லை. இதனால், இந்த பகுதியை ேசர்ந்த பொதுமக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று சுத்தமாக குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, சுத்தமான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குணசேகர், மணியாநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 9:09 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#12041

தடுப்பு வேலி வேண்டும்

தடுப்பு வேலி வேண்டும்சாலை

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மீன்சந்தையில் இருந்து வளநகர் செல்லும் சாலையில் செங்குளம் உள்ளது. இந்த குளம் நிரம்பும் போது வெளியேறும் மறுகால் தண்ணீர் சாலையை கடந்து செல்கிறது. மேலும் சாலையின் இருபுறமும் பள்ளமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையில் தடுப்பு வேலிகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜஸ்டின், அழகப்பபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 8:48 AM GMT
Mr.Pathiman | விளவங்கோடு
#12038

துர்நாற்றம் வீசுகிறது

கழிவுநீர்

இடைக்கோடு பஞ்சாயத்தில் மேல்பாலை தபால் நிலையம் அருகே ரப்பர் ஷீட் அடிக்கும் எந்திரத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சுகாதாரத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, தேவிகோடு. 94862 53635

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 8:47 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#12037

புதர் அகற்றப்படுமா?

புதர் அகற்றப்படுமா?மற்றவை

மணவாளக்குறிச்சி சந்திப்பில் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெட்டி உள்ளது. இதனை சரியாக பராமரிக்காததால் சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர்களாக மாறி வருகிறது. எனவே, செடிகளை அகற்றி தொலைத்தொடர்பு இணைப்பு கருவிகளை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கோ. ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி. 94431 87606

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 8:45 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#12035

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

திக்கணங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மீன்சந்தை வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை சரியாக பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவறையை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -விஜு, புதூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick