Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Sep 2022 9:40 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#16471

குளம் தூர்வாரப்படுமா?

குளம் தூர்வாரப்படுமா?தண்ணீர்

வில்லுக்குறி அருகே பொட்டரற்று குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீர் மூலம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது இந்த குளம் பராமரிக்கப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் குளத்தின் மதகுகளும் பழுதடைந்து உள்ளன. குளத்தில் போதிய தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அவானிஸ் ஆன்டனி ராய், வில்லுக்குறி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 9:39 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#16470

செடிகளை அகற்ற வேண்டும்

செடிகளை அகற்ற வேண்டும்குப்பை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமவர்மபுரம் பழைய வங்கிகாலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குப்பைகளை சேகரிக்க பணியாளர்கள் யாரும் வருவதில்லை. மேலும் இந்த பகுதியில் சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் காடாக மாறி வருகிறது. எனவே, செடிகளை அகற்றி சுகாதாரம் பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜெயராம், ராமவர்மபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 9:37 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#16469

தடுப்புசுவர் வேண்டும்

தடுப்புசுவர் வேண்டும்சாலை

கீழஆசாரிபள்ளத்தில் இருந்து பெரும்செல்வவிளைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் வெள்ளமண்ணோடை பகுதியில் ஆற்றின் குறுக்கே ஒரு சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் ஒரு பக்கமுள்ள தடுப்புசுவர் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தில் தடுப்பு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆன்டனி சதீஷ், ஆசாரிபள்ளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 1:39 PM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#15914

நடவடிக்கை எடுக்கப்பட்டது

நடவடிக்கை எடுக்கப்பட்டதுமற்றவை

சுசீந்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த சாய்வுதள பாதையின் மேலே 2 படிக்கட்டுகள் இருந்ததால் சக்கர நாற்காலிகளில் வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்வு தளத்தை சரியாக சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 9:18 AM GMT
Mr.Pathiman | கிள்ளியூர்
#15835

சீரமைக்க வேண்டிய சாலை

சீரமைக்க வேண்டிய சாலைசாலை

மெதுக்கும்மல் ஊராட்சியில் கைப்பூரிவிளையில் இருந்து முளங்குவிளை வழியாக முள்ளிறங்கிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக செப்பனிடப்படவில்லை. இதனால் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இந்த சாலைைய சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரமேஷ், மெதுக்கும்மல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 9:17 AM GMT
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#15834

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

செம்பருத்திவிளை அருகே ேகாதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொற்றிக்கோடு போலீஸ் நிலையம் போன்றவை இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றி வருகின்றன. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருந்து வாங்க வரும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் செல்கிறவர்களை நாய்கள் கடிப்பதற்காக துரத்துகின்றன. எனவே தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெலிக்ஸ் ராஜ், செம்பருத்திவிளை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 9:15 AM GMT
Mr.Pathiman | கிள்ளியூர்
#15833

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

கருங்கல் அருகே உள்ள இலவன்படவிளையில் இருந்து படுவாகுளம் பகுதிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் பயணம் செய்கிறார்கள். தற்போது இந்த சாலையில் உள்ள தார் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜெகன், ெதருவுக்கடை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 9:12 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#15832

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிசாலை

பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட நயினாபுதூர் முதல் காட்டுவிளை காலனிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அ.அனுபவ், தெங்கம்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 9:24 AM GMT
Mr.Pathiman | விளவங்கோடு
#15641

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்பம்மம் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் ெகாட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி மினி குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது. எனவே, சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -எஸ்.முகமது சபீர், குளச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 8:53 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#15640

பஸ்களை சீரமைக்க வேண்டும்

போக்குவரத்து

நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம், குற்றியாணி, கடியப்பட்டணம் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இரவில் இந்த பஸ்களில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. மழைக்காலங்களில் பஸ்களின் மேற்கூரை ஒழுகுவதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே பயணிகள் நலன்கருதி பழைய பஸ்களை அகற்றிவிட்டு தரமான பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்.மகேஷ், ராஜாக்கமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 8:52 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#15639

சீரமைக்க வேண்டிய சாலை

சீரமைக்க வேண்டிய சாலைசாலை

தேங்காப்பட்டணம் தோப்பில் இருந்து அல்அமீன் பள்ளிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் தவறி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அபுதாய்ரு, குளச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 8:12 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#15638

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

கழிவுநீர்

தேருர் பேரூராட்சியில் எஸ்.பி. காலனி 14-வது தெருவில் மழைநீர் ஓடை இருந்தது. தற்ேபாது ஓடையை மண்ணால் நிரப்பி ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் மழை நீர் பாய்ந்து ெசல்லாமல் அருகில் உள்ள காலி மனையில் தேங்கி நிற்கிறது. அத்துடன் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.அய்யப்பன், தேரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick