Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 March 2023 3:00 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29510

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு பகுதியில் 2-வது தளத்தில் உணவு கழிவுகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தை பெற்ற பெண்கள் இதன் வழியாக கழிவறைக்கு செல்ல வேண்டும். இந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் இருக்கிறார்கள். இதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த உணவு கழிவுகளை அந்த பகுதியில் கொட்டாமல் வேறு இடத்தில் கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கோபிநாத், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 2:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29509

பூட்டியே கிடக்கும் நூலகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகம் கட்டிடம் சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பூட்டியே கிடக்கும் கிளை நூலகத்தை திறக்க துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகளின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கார்த்தி, அகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29367

வீணாகும் மின்சாரம்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தியில் மின்விளக்குகளை இரண்டு பகுதிகளாக பிரித்து உள்ளனர். அதில் புதுரோடு பகுதிகளில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் கடந்த ஒரு வாரமாக 24 மணி நேரமும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே மின்வாரிய துறையினர் இரவு நேரங்களில் மட்டும் மின்விளக்கு எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமு, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29365

ஆபத்தான குழி

சாலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகா திண்ணனூர் நாடு ஊராட்சி வாசலூர்பட்டியில் படகு இல்லம் உள்ளது. இந்த படகு இல்லத்தின் நுழைவாயில் அருகே சாலை ஓரத்தில் ஒரு அபாய குழி உள்ளது. இந்த வழியே செல்லும் சுற்றுலா பயணிகளோ அல்லது மலைவாழ் மக்களோ அதில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே இந்த குழியை மூட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-செந்தில், வாசலூர்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29364

பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சி நெடுஞ்சாலையில் நாவல்பட்டி காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த தொட்டியில் குடிநீர் நிரப்பி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-மணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29361

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் நாமக்கல் ஆட்டோநகர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. எஸ்.வாழவந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பின்புறம் செல்லும் இந்த குழாயில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையும் சேதமடைகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.-ராம்குமார், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:08 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#29360

தூர்வாரப்படுமா? சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

சேலம் அம்மாபேட்டையில் பாண்டியன் ரோடு வித்யாநகரில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிகமாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.-ரவி, அம்மாபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#29357

நோய் பரவும் அபாயம்

குப்பை

சேலம் ஜங்சன் அருகில் இரும்பாலை செல்லும் ெரயில் நகர் பகுதியில் பாலத்தின் இறக்கத்தில் இறைச்சி கழிவுகள் மூட்டை, மூட்டையாக வீசப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-குமார், பழைய சூரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:06 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#29355

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்தம்பட்டி போஸ்ட் கண்காணிப்பட்டியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக 4 மின்விளக்குகள் எரியவில்லை. இந்த பகுதியில் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். திருட்டு பயமும் அதிகமாகி உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்குகளை எரிய செய்ய வேண்டும்.-இளவரசன், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29349

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி அம்மேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பர்கூரில் இருந்து எமக்கல்நத்தம் செல்லும் சாலை, அரசு உயர்நிலைப்பள்ளி பின்புறம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பழனிவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29348

விபத்துகள் ஏற்படும் அபாயம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் ஜி.நாகமங்கலம் இடத்தில் கடந்த வருடம் எருது விடும் திருவிழாவிற்காக குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிகள் மீண்டும் மூடப்படவில்லை. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குழிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரமேஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29346

பழுதான மின்விளக்குகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். மேலும் திருட்டு அச்சமும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பழுதான மின் விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.-ராமன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick