Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 March 2023 3:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29732

பிளாஸ்டிக் குப்பைகள்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையம் அருகே சின்ன ஏரி அமைந்துள்ளது. பஸ் நிலையத்தின் அருகே உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் ஆழ்துளை கிணறுகளுக்கு இந்த ஏரியின் மூலமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர் கிடைத்து வருகிறது. இந்த சின்ன ஏரியில் பிளாஸ்டிக் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏரி மாசடைந்து தண்ணீரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே ஏரியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி மேலும் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:26 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29521

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பழைய தாலுகா அலுவலகம் அருகில், நாமக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட 'கேட்வால்வு' திறந்து தண்ணீர் சாலையில் வெளியேறி, சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வாரத்துக்கும் மேல் சாலையில் வெளியேறி சாக்கடையில் கலந்து தண்ணீர் வீணாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாரதி, மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:26 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29520

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் நூற்றுக்கணக்கான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் இருந்து இலைகள், கழிவுகள் போன்றவற்றையும் குப்பை கூளங்களையும் சர்வீஸ் ரோட்டில் கல்லூரி அருகே கொட்டுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தும் ஓட்டல் நடத்துபவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்து வருகின்றனர். இதனால் கல்லூரி மாணவர்கள், நடந்து செல்பவர்கள் முகம் சுழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலை ஓரத்தில் குப்பை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:24 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29519

பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள 4-வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை பணிகளுக்காக சாக்கடை கழிவுநீர் செல்வதற்காக கட்டப்பட்ட கால்வாய் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இதனை முழுமையாக முடித்து அப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29518

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பாகல்பட்டி ஊராட்சி ஓம்சக்தி நகரில் கடந்த 5, 6 தெருவிளக்குகள் எரியவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த மின்விளக்குகள் எரியாததால் ஓம்சக்திநகர் பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவு நேரங்களில் வழிப்பறி உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். எனவே திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கும் முன் அந்த பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:11 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29517

ஒளிரும் விளக்குகள் அவசியம்

மின்சாரம்

சேலம் மாவட்டம் மேச்சேரி நெடுஞ்சாலை உதவி பொறியாளர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் நடுவே தடுப்பு சுவர் உள்ளது. இந்தநிலையில் இரவு நேரத்தில் தடுப்பு சுவர் இருப்பது தெரிவது இல்லை. இதனால் கார், லாரி போன்ற வாகனங்கள் அடிக்கடி இதில் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்தை தவிர்க்க ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-துரை, மேச்சேரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:10 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29516

புதுப்பிக்க வேண்டிய சாலை

சாலை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கங்காணிப்பட்டி 4-வது வார்டு மானத்தாள் கிராமத்தில் உள்ள தார்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கண்காணிப்பட்டி ஊர் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி தான் அவர்களுடைய தோட்டத்திற்கும், வீட்டுக்கும் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி குழந்தைகள் வாகனமும் சுற்றி தான் வருகிறது. இந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.-கங்கை, கங்காணிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29515

சாலை நடுவே பள்ளம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலைய சாலையில், பெரியார் நகரில் வேல்முருகன் கோவில் உள்ளது. நகரின் முக்கிய சாலையான இந்த சாலை வழியே நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் வந்து செல்கின்றன. மேலும் மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும். இந்த நிலையில் வேல்முருகன் கோவில் எதிரே சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29514

நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் சமுதாய நலக்கூடம் அரசால் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் நிகழ்ச்சிகள் நடத்த குறைந்த வாடகையில் அரசு வழங்க வேண்டும் என நோக்கத்தோடு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், தனி நபர்கள் வணிக வளாகமாக்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதிமுறைகள் மீறி செயல்படும் வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஏழை, எளிய மக்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஊர்பொதுமக்கள், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29513

ஏ.டி.எம். மையங்கள் அமைக்கலாமே!

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தின் முன்புறம் போதுமான ஏ.டி.எம். மையங்கள் இல்லை. பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் பணத்தை பெறுவதற்காக மிகவும் சிரமப்படுகின்றன. எனவே வங்கி அதிகாரிகள் கூடுதல் ஏ.டி.எம். மையங்கள் அமைக்க முன்வரவேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.-சந்திரன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:02 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29512

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

பொம்மிடியில் தர்மபுரி செல்லும் சாலை, சேலம் செல்லும் சாலை, ஆர்.எம்.ரோடு ஆகிய சாலைகள் சந்திக்கும் ரெயில் நிலையம் முன்பு போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளன. பாரஸ்ட் ரோடு செல்லும் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளன. இருசக்கரவாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. எனவே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தென்றல், பொம்மிடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:01 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29511

விதிகளை மீறும் ஆட்டோக்கள்

விதிகளை மீறும் ஆட்டோக்கள்போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக சென்றுவர 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விதித்துள்ளது. விதிமுறைகளை மீறி சில ஆட்டோக்களில் சுமார் 15 நபர்களை ஏற்றிச் செல்லுகின்றனர். சிலர் சரக்கு வாகனங்களை போன்று தக்காளி, காய்கறி, சிமெண்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick